Sunday, January 6, 2013

இசை கலைஞர்களை ராஜா புறக்கணிக்கிறாரா?


பின்னூட்டங்களின் வாயிலாக என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தும்
நல்ல உள்ளங்களுக்கு என் கோடானுக்கோடி நன்றிகள்.

ராஜா ஏன் தன்னுடைய இசை கலைஞர்களை அவருடைய ஒலி நாடாக்களில், ஒலிப் பேழைகளில் முன்னிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் பொருட்டு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

பல வருடங்களாகவே ஒரு எழுத்தாளர் தன்னுடைய எழுத்துக்களில் ராஜா மீது கொட்டும் நெருப்பு என்னவென்றால், அவர் தன்னுடைய படைப்புகளுக்குரிய Credit அனைத்தையும் அவரே பெற்றுக்கொள்கிறார், அவருடைய இசை கலைஞர்களை அங்கீகரிப்பதில்லை, அவருடைய பாடல்களின்  CD, Cassette, LP Record  போன்றவற்றில் “இசை – இளையராஜா” என்று தான் இருக்கிறதேயன்றி, புல்லாங்குழல் இன்னாருடைய மூச்சு காற்று, கிடார் அன்னாருடைய விரல் வித்தை, வயலின் இவர் தான் வாசித்தார், வீணை மீட்டய பெருமகனார் இவரே என்று யாருடைய பெயர்களையும் போடாமல் அழிச்சாட்டியம் செய்கிறார் என்பதே. வேறு ஒரு இசையமைப்பாளருக்கு சர்வதேச விருது கிடைத்த போது, அவரை பாராட்டி எழுத ஒரு பிரபல வார இதழ் இவரை அணுக, இவரோ அந்த இசையமைப்பாளரை பாராட்டுவதை விட்டு, இளையராஜாவை திட்டுவதற்கு மட்டுமே அக்கட்டுரையை பயன்படுத்திக்கொண்டார். அவர் எடுத்துக்கொண்ட ”திட்டுப் பொருள்” இசை கலைஞர்களை ராஜா புறக்கணிக்கிறார் என்பதே. அவ்விருது பெற்றவர் மட்டுமே தன்னுடைய மகுடத்தில் அனைத்து கற்களையும் பொதித்து அழகு பார்க்கிறார், ராஜா அவ்வாறு இல்லை என்பதே அவரின் வாதம்.

சரி, கொஞ்சம் பின்னோக்கி பயணிப்போம். எவ்வளவோ இசை மேதைகளை தமிழ் திரையுலகம் சந்தித்திருக்கிறது. அதில் ஒருவர் 
திரு. எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள். அவருடைய இசைக்குழுவில் பாடகர்கள், பாடகிகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோருக்கு தெரிந்த ஒரே பிரபலமானவர் திரு. சதன் அவர்களே. இந்த இந்த இசைக்கருவிகளை இன்னார், இன்னார் தான் வாசிக்கிறார்கள் என்பது வெளியுலகத்திற்கு தெரியவில்லை.

மேலும் 1970ல் எம்.எஸ்.வி ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். ஆல்பத்தின் பெயர் M.S.V ORCHESTRATION. இந்த ஆல்பம் HMV நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தில் எந்த இசைக்கலைஞர் பெயரும் வெளியிடப்பவில்லை. மேலும் இசை கலைஞர்களை  In Lay cardல் வெளியிடும் பழக்கம் தொன்று தொட்டு தமிழ் திரைவுலகில் இருந்தது இல்லை. கே.வி. மகாதேவன் இசையமைத்த படங்களில் “உதவி .. புகழேந்தி” என்று போடுவார்கள். அது போல விஸ்வநாதன் இராமமூர்த்தி படங்களில் உதவியாளர்கள் பட்டியலில் ஜி.கே. வெங்கடேஷ் பெயர் இடம்பெற்றது. விஸ்வநாதன் தனியாக இசையமைத்த படங்களில் தாஸ் டேனியல், கோவர்தனம், ஜோஸ்ப் கிருஸ்ணா போன்றோர் பெயரும், இடம்பெற்றிருந்தது. எவ்வளவோ பேர் விஸ்வநாதனிடத்து பணியாற்றியும் அவர் இசைக்குழுவில் அடையாளம் காணப்பட்ட நபர் சதன் மட்டுமே. 

ஆனால் ராஜாவிடத்து நிலைமை வேறு. இதற்கிடையில் ராஜா பெரும்பாலான இசையமைப்பாளர்களிடம் வாசித்து வந்தார், உதவியாகவும் இருந்தார். ராஜாவின் தனித்தன்மை, இசை ஆளுமை, திறமை ஆகியவற்றை அவர் வேலை புரிந்த இசையமைப்பாளர்கள் கண்கூடாக பார்த்தார்கள். அந்த திறமைக்கு சான்றாக திரு.கோவர்தன் இசையமைத்த வரப்பிரசாதம் திரைப்படத்திற்கு மட்டும் Title Cardல் இசை..கோவர்தன், உதவி … ராஜா என்ற அங்கீகாரம் கிடைத்தது . ஆனால் வி.குமாரின் இசையில் வந்த சில பாடல்கள் ராஜாவே இசையமைத்தது. ஆனால் ராஜாவின் பெயர் அப்படங்களின் Title Cardல் வெளிவரவில்லை. சினிமா துறை அவ்வாறு தான் இருந்தது.. இவ்விதமான School of Thought இருந்த காலத்தில் பணியாற்றிய ராஜா, தனி இசையமைப்பாளர் ஆன பின் தனக்கென ஒரு பிரத்யேக இசைக்குழுவை அமைத்துக்கொண்டார்.

‘Guitar           --- Mr.Sadanandam, Mr.Sasidhar
Tabla            --- Mr.Prasad,
Violin            --- Mr. Prabakar, Mr. Juddy
Keyboard         --- Mr. Viji Manuel
Drums           --- Mr. Purushothaman
Cello            --- Mr.Sekar
Flute            --- Mr. Napolean
Other Instruments   -- Mr.Jaycha Singaram
Chrorus          -- Mr.Saibaba,.
Other Help        -- Mr.Sundarrajan
போன்றோர் மேற்சொன்ன இசைக்கருவிகளோடு அடையாளம் காணப்பட்டார்கள். மேலும் அக்காலக்கட்டத்தில் பாடல் கேட்பதென்றால் பெரும்பாலானோருக்கு வாய்த்த, வயப்பட்ட ஒரே ஊடகம் வானொலி தான். InLay Cardல் இவர்கள் பெயர் இல்லாமல் இருந்தபோதே இக்கலைஞர்களை தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள், இயக்குனர்கள் அடையாளம் கண்டுக்கொண்டனர். 

மேலும் மக்களுக்கு வானொலி கேள்வி ஞானத்திலேயே எந்தெந்த இசைக்கருவிகள்,  பாடல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அடையாளம் கண்டுக்கொண்டார்கள். இது ராஜாவுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. புல்லாங்குழல் எது, வீணை எது, கிடார் எது, சிதார் எது என்று மக்கள் அடையாளம் கண்ட காலம் ராஜாவின் இசை பிரவேசத்திற்கு பின்பே. சரி, திரை கலைஞர்களுக்கு, திரை உலகு சம்பந்தப்பட்டவர்களுக்கு இக்கலைஞர்களை தெரியும், மக்களுக்கு தெரிந்ததா என்ற நியாயமான கேள்வி எல்லோர் மனதிலும் எழும். ராஜாவின் பாடல்களில் எல்லாவிதமான இசைக்கருவிகளும் பயன்படுத்தும் போது அவர் தனி தனியாக இவர் தான் இசைத்தார் என்று வெளியிடவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட கலைஞரின்  Solo Performance வரும்போது, அக்கலைஞரின் பெயரை முன்னிறுத்துவதில் ராஜா முன்னோடியாக இருந்திருக்கிறார். 

உதாரணமாக 1981ல் வெளிவந்த ராஜ பார்வை படத்தின் Recordல் வயலின் கலைஞர் திரு. வி.எஸ். நரசிம்மன்  பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும் புதிர் என்ற படத்தில் வரும் முதல் முத்தம் தான் என்ற பாடலின் Instrumental Version வாசித்தவரான திரு.சந்திரசேகர் ( திரு.புருஷோத்தம் அவர்களின் சகோதரர்) அவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.அவரின் பெயர் செல்வி படத்தில் வரும் இளமனது பாடலின் Instrumental Versionக்கும் இடம்பெற்றிருந்தது 

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் Band Music, தில்லானா மற்றும் நாதஸ்வரம் ஆகியவற்றை வாசித்த மதிப்பிற்குரிய சேதுராமன் மற்றும் பொன்னுசாமி ஆகியோரின் பெயர் அப்படத்தின்  Title cardல் இடம்பெற்றது ஆனால் இப்படத்தின் 78 rpm (Revolutions per minute) Columbia Record மற்றும்  45 rpm Angel Recordல்  இவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் 1981ல் இசை ஞானியின் இசையில்  வெளிவந்த கோயில் புறா படத்தின் Recordல் சேதுராமன் மற்றும் பொன்னுசாமி அவர்களின் பெயர் வெளிவந்தது.   

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் 1986ல் வெளியான “How to Name It” ஆல்பத்தில் இசை கலைஞர்களின் முழுப்பட்டியல் இருந்தது.


 மேலும் “Nothing But Wind” ஆல்பத்தில் புல்லாங்குழல் கலைஞர் செளராச்சியா பெயரும் இடம்பெற்றிருந்தது.

 என்ன சொல்ல வருகிறேன் என்றால், பாடல்கள் அல்லாமல் வெறும் இசைக்கருவிகளைக் கொண்டே நிகழ்த்தப்படும் எந்தவொரு arrangementக்கும் ராஜா அந்த கலைஞர்களுக்குரிய மரியாதையை செய்ய தவறியதில்லை. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எப்பேர்ப்பட்ட திறமையான இசைக்கலைஞரும், ராஜாவின் இசைக்குறிப்புக்களையே (Notes) வாசிக்கிறார், அந்த Notesக்குரிய இசை வடிவம், ஒலி அளவு ஆகியவற்றை கொண்டு வர மெனக்கெடுபவர் ராஜா மட்டுமே. அந்த இசை வடிவத்தை இன்னார் தான் கொண்டு வருவார் என்று தீர்மானிப்பவரும் ராஜா தான். எனவே அவர் கலைஞர்களை அங்கீகரிப்பதில்லை என்ற பொய் வாதம் எடுபடாது. அவ்வாறு அங்கீகாரம் கிடைப்பதால் தான் அன்னக்கிளியில் அவரோடு இணைந்து பணியாற்றிய இசை வல்லுனர்கள் இன்று வரை அவரோடு தொடர்கிறார்கள்.

இப்போதுள்ள இசையமைப்பாளர்களுக்கு தனியாக, பிரத்யேகமான இசைக்குழு என்ற ஒன்று கிடையாது, எனவே Cassette, CD Cardகளில் அவர்களுக்கு வாசிக்கும் நபர்களின் பெயரை வெளியிடுகின்றனர். அதுவும் அக்கலைஞர்கள், இசையமைப்பாளரின் “Notes”க்கு வாசிப்பதில்லை. உதாரணத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், நான் என்ன செய்வேன் என்றால் கிடார் வாசிக்க வரும் நபரிடம், ”தன் தனா, லா லா லே ரம் பம் பம்” என்று பாடிக் காட்டி, இதற்கு வாசிக்க வைப்பேன். அவ்வாறு வாசித்தப்பின் அதை கணினியில் மிக்ஸ் செய்து, பவுடர், பூ, மை எல்லாம் இட்டு ஒரு மாதிரி output வர வைப்பேன். எனவே அந்த கிடார் கலைஞனின் பெயரை நான் வெளியிட வேண்டும்.

ஆனால், ராஜா அப்படியல்ல, என்னென்ன வாத்திய கருவிகள் வேண்டும், எந்த ஒலி வடிவம் வேண்டும், எந்த கால அளவுக்குள் அவை இருக்க வேண்டும் போன்ற மொத்த சமாச்சாரங்களையும் தீர்மானித்து அதற்குரிய Notes எழுதி, அதை முன்னின்று மேற்பார்வையிட்டு, ஒலிப்பதிவு வரை முடித்து வைப்பவர் ராஜா அவர்கள். 

மேலும் அவர் 2005 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் ஜெயா டி.வி.க்காக நடத்திய நிகழ்ச்சிகளில் மேடையில் ஒவ்வொரு இசை கலைஞரின் பங்களிப்பையும், அவர்களின் சிறப்பையும் எடுத்துரைத்தார். அவர்கள் எவ்வளவு ஆண்டுகள் அவரிடம் பணியாற்றுகிறார்கள்  என்பதையும் உரைத்தார். தம்முடைய கலைஞர்கள் மட்டுமன்றி, ஹங்கேரி மட்டும் இங்கிலாந்து நாட்டு கலைஞர்களையும், அவர்களின் மேன்மையையும் விலாவாரியாக மேடைகளிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் அவர் என்றும் கூற தவறுவதில்லை.

இப்படிப்பட்டவரா  இசை கலைஞர்களை புறக்கணிக்கிறார், கவுரவிக்க தவறுகிறார் என்று சொல்கிறார்கள்? முடிவை உங்கள் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறேன்.


15 comments:

  1. எந்த இசை வல்லுனருக்கும் தனித் திறமை இருந்தால் அவர்களே தனியாக இசை அமைப்பாளராகலாம்.
    இதற்க்கு யாரும் தடை இல்லை.இதெல்லாம் (Credits issue) ராஜாவின் வளர்ச்சியில் அல்லது திறமையின் மீது பொறாமை கொண்டோரின் வாதம்.

    ReplyDelete
  2. You have said what i wanted to say in these lines //மேலும் அவர் 2005 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் ஜெயா டி.வி.க்காக நடத்திய நிகழ்ச்சிகளில் மேடையில் ஒவ்வொரு இசை கலைஞரின் பங்களிப்பையும், அவர்களின் சிறப்பையும் எடுத்துரைத்தார். அவர்கள் எவ்வளவு ஆண்டுகள் அவரிடம் பணியாற்றுகிறார்கள் என்பதையும் உரைத்தார். தம்முடைய கலைஞர்கள் மட்டுமன்றி, ஹங்கேரி மட்டும் இங்கிலாந்து நாட்டு கலைஞர்களையும், அவர்களின் மேன்மையையும் விலாவாரியாக மேடைகளிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் அவர் என்றும் கூற தவறுவதில்லை.

    இப்படிப்பட்டவரா இசை கலைஞர்களை புறக்கணிக்கிறார், கவுரவிக்க தவறுகிறார் என்று சொல்கிறார்கள்? முடிவை உங்கள் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  3. Only from raja we come to know who played what. This include that double oscar winner. He was assisting raja in keyboards and feeding midi into computer.

    ReplyDelete
  4. Well said ji. Shaji pondra moondram tharam vaintha aatkal indru puyalu perumaigalaey sollugindranar..ivar raja sir pathi pesarathu thappu.

    ReplyDelete
  5. தரமான பதிவு ! தொடர்ந்து எழுதுங்கள் !!

    ReplyDelete
  6. Well said sir, Raja Sir gave notes to all the instruments. So the whole credit goes to One and Only RAJA.

    ReplyDelete
  7. super sir....You are doing a great job...pls continue

    ReplyDelete
  8. Super Sir... புல்லாங்குழல் எது, வீணை எது, கிடார் எது, சிதார் எது என்று மக்கள் அடையாளம் கண்ட காலம் ராஜாவின் இசை பிரவேசத்திற்கு பின்பே.. The Real Fact....

    ReplyDelete
  9. Solluvathellam unmai, unmaiyai thavira verillai. Neengal kuronukku nigaranavar, geethaikku samamanavr. Valga ungal nalam, valarga ungal pani. nandrigal pala.

    ReplyDelete
  10. அனைது பின்னூட்டங்களுக்கும் நன்றி, நண்பர்களே!!

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. இது இன்று நேற்று நடக்கும் நிகழ்ச்சி அல்ல, அவர் அறிமுகம் ஆன நாள் முதலே அணைத்து ஊடகங்களும் அவரின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி அவரை அழிப்பதற்கு உண்டான அணைத்து வேலைகளையும் செய்து பார்த்தது ஆனால் அவரின் இசை அறிவு, இசை நுட்பம், இசையில் அவர் செய்த புரட்சி, அவரின் ஆளுமை வென்றது. நான் அவர்களை பார்த்து கேட்கிறேன் எதற்காக இசைக்கருவி வாசித்தவர்களின் பெயர்களை குறிப்பிடவேண்டும். சற்று யோசித்துப்பார்த்தால் நகைச்சுவையாக உள்ளது. அணைத்து குறிப்புகளையும், அளவையும், எந்த எந்த இசைக்கருவி எந்த இடத்தில வரவேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என அனைத்தையும் சொல்லிகொடுத்து விட்டு வாசித்தவர்களின் பெயர்களை ஏன் குறிப்பிடவேண்டும். அனைத்தையும் செய்தவர் இசைஞானி அவர்கள், எனவே அணைத்து புகழும் அவருக்கு மட்டுமே உரியது.

    அப்படி இது ஒரு குறையாக இருக்குமேயானால் இதனை ஆண்டு காலம் அந்த இசைக்கலைஞர்கள் அவருடன் இருக்க மாட்டார்கள். அவர் அறிமுகம் ஆனா ஆண்டு முதல் இன்று வரை எந்த ஊடகமும் (வானொலி, தொலைக்காட்சி, வலைத்தளம், பத்திரிக்கை) அவருக்கு துணையாக இருந்தது இல்லை.(துணை தேவை இல்லை என்பது இன்னொரு விஷயம்). அனைத்தையும் மீறி தனது இசைதிறமையால் இவ்வுலகத்தை வென்றெடுத்த இசை மாமேதையை வணங்குவதில் பெருமை கொள்கிறேன். ஆற்றுவார் ஆற்றட்டும் சேர் வாரி தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் இசை செய்து கிடப்பதே என்று வீறு நடை போடும் என் இசைக்கடவுளே உன்னை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

    ReplyDelete
  13. நெஞ்சார்ந்த நன்றி திரு சிக்கந்தர்! அவர்களே நீண்ட நாட்களாக ராஜா அவர்கள் மேல் சுமத்தப்படும் அபாண்டமான, ஆதரமற்ற,கண்ணியமற்ற குற்றசாட்டுகளுக்கு தகுந்த ஆதரங்களுடன், ஆணித்தரமாக பதிலளித்துள்ளீர்கள் . தொடரட்டும் உங்கள் பணி. உங்களுக்கு துணையாக ராஜா அவர்களின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவரும் இருப்போம்.

    ReplyDelete
  14. அருமையாக சொன்னீர்கள், புதுக்கோட்டை ரமேஷ். நன்றி, திரு. செந்தில்தாசன்.

    ReplyDelete